02 NOV 2026
Credit: Getty
இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான சிறந்த அமைப்பாக இபிஎஃப்ஓ உள்ளது.
இபிஎஃப்ஓ அமைச்சகம் ஊழியர்களின் பெயர்களில் பிஎஃப் பணத்தை வரவு வைக்கிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான ஊழியர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
பயனர்கள் எளிதாக சேவைகளை பெறும் வகையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் சேவைகளை வழங்கும் நிலையில், வாட்ஸ்அப் உதவி எண்ணை அறிமுகம் செய்துள்ளது.
இது பயனர்களுக்கு மிக சிறந்த அம்சமாகவும், மிக எளிதாக அனுக கூடிய ஒரு அம்சமாகவும் உள்ளது.
ஆனால், ஊழியர் வருங்கால அவைப்பு நிதி பயனர்கள் இந்த வாட்ஸ்அப் உதவி எண் குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டியது ஒன்று உள்ளது.
அதுதான், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் வாட்ஸ்அப் எண்ணின் செயல்பாடுகள் ஆகும்.
அதாவது, இந்த வாட்ஸ்அப் எண்ணின் பயனர்களால் எந்த வித சேவைகளையும் பெற முடியாது. பிறகு எதற்கு இந்த வாட்ஸ்அப் என்று உங்களுக்கு தோன்றலாம்.
அதாவது, இந்த வாட்ஸ்அப் எண் மூலம் பேலென்ஸ் செக் செய்வது உள்ளிட்ட எந்தவிதமான சேவைகளையும் பெற முடியாது.
மாறாக இந்த வாட்ஸ்அப் உதவி எண் மூலம் இபிஎஃப்ஓ சேவைகள் தொடர்பான வழிகாட்டுதல்களை மட்டுமே பெற முடியும்.
இந்த வாட்ஸ்அப் உதவி எண் மூலம் சேவைகளை பெற முடியாது ஆனால், சேவை சார்ந்த விளக்கங்கள் மற்றும் விவரங்களை பெறலாம்.