10 SEP 2026
Credit: GETTY
தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி புதிய புதிய மோசடிகள் அரங்கேற்றப்படுகின்றன. இத்தகைய மோசடிகளில் சிக்கி பலரும் தங்களது பணத்தை இழந்து வருகின்றனர்.
அந்த வகையில், உங்களது ஆதார் கார்டை பயன்படுத்தி உங்களுக்கே தெரியாமல் ஒன்றுக்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை பெற வாய்ப்புள்ளது.
மத்திய தொலைத்தொடர்பு துறையின் விதிகளின்படி, ஒருவர் 9 சிம் கார்டுகள் வரை அனுமதி வழங்கப்படும்.
இந்த நிலையில் தான், அடையா மோசடியை பயன்படுத்தி ஆதார் கார்டு மூலம் உங்களுக்கே தெரியாமல் சிம் கார்டு வாங்கப்படும் அபாயம் உள்ளது.
எனவே தான், உங்களது பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளன என்பதை அவ்வப்போது சோதனை செய்துக்கொள்வது மிகவும் அவசியமானதாக உள்ளது.
ஒருவருக்கு சிம் கார்டை வழங்குவதற்கு முன்னதாக டெலிகாம் நிறுவனங்கள் ஆதார் கார்டை தான் முதன்மை ஆவணமாக கோறும்.
இந்த நிலையில் தான், பிரரின் அடையாள ஆவணங்களை திருடும் மோசடிக்காரர்கள், அதன் மூலம் சிம் கார்டுகளை வாங்கி மோசடியில் ஈடுபடுகின்றனர்.
ஒருவரின் ஆதாரை பயன்படுத்தி சிம் கார்டு வாங்குவது, பான் கார்டை பயன்படுத்தி நிறுவனம் தொடங்குவது என பல வகைகளில் மோசடிகள் நடைபெறுகின்றன.
இத்தகைய மோசடிகளில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள நினைக்கும் நபர்கள் சஞ்சார் சாதி இணையதளத்தை பயன்படுத்தலாம்.
இந்த இணையதளத்தில் உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளன என்பதை தெரிந்துக்கொண்டு, நீங்கள் பெறவில்லை என்றால் உடனடியாக நடவடிக்கை எடுக்கலாம்.