Credit: Instagram

04 November 2026

மூக்குத்து அம்மன் 2 படத்தில் கேமியோ வேடத்தில் இரு நடிகைகள்?

Credit: Instagram

தமிழ் சினிமாவில் மக்களால் நடிகராகவும், இயக்குநராகவும் மற்றும் தயாரிப்பாளராகவும் அறியப்பட்டுவருபவர் இயக்குநர் சுந்தர் சி.

இவரின் இயக்கத்தில் 2026ல் மிகவும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு, வெளியாக காத்திருக்கும் படம்தான் மூக்குத்தி அம்மன் 2.

நடிகை நயன்தாரா  கதாநாயகியாக இப்படத்தில் நடித்துள்ள நிலையில், இப்படமானது பான் இந்திய மொழிகளில் வெளியாகிறது.

இந்த படமானது மூக்குத்தி அம்மன் 1 படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்தில் இல்லாமல் புது கதையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நடிகை நயன்தாரா, அம்மன் மற்றும் போலீஸ்  அதிகாரி என இரு வேடங்களில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் அவருடன் ரெஜினா, யோகி பாபு, ஊர்வசி, சுனில் மற்றும் பல்வேறு தென்னிந்திய பிரபலங்களும் இணைந்துள்ளனர்.

சுந்தர் சி மற்றும் நயன்தாராவின் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த மூக்குத்தி அம்மன் 2 படமானது ரூ 100 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

இந்த படத்தில் நயன்தாராவுக்கு எதிரியாக நடிகை ரெஜினா நடித்துள்ளார். இவர் முழு நெகட்டிவ் வேடத்தில் நடிக்கும் முதல் படம் இதுவாகும்.

இப்படமானது வரும் 2026ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் இந்த மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் கேமியோ வேடத்தில் நடிகை குஷ்பு மற்றும் நடிகை சினேகா இருவரும் நடித்துள்ளார்களாம்.