Credit: Instagram

17 october 2026

பர்த்டே பேபி கீர்த்தி சுரேஷின் சம்பளம் மொத்தம் எத்தனை கோடி தெரியுமா?

Credit: Instagram

சினிமாவில் தென்னிந்திய மொழிகளில் மக்களிடையே புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர்தான் கீர்த்தி சுரேஷ்.

நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த 1992ம் ஆண்டி அக்டோபர் 17ம் தேதியில், கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் பிறந்தார்.

சினிமா குடும்பத்தில் பிறந்த இவர், தனது சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடிக்க ஆர்வம் கொண்டிருந்தார். சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.

இவரின் தந்தை சுரேஷ் மலையாள சினிமாவில் தயாரிப்பாளராகவும், தான் மேனகா தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நடிகையாகவும் இருந்தவர்.

இதனால் தனது சிறுவயதிலிருந்து நடிப்பின் மீது கீர்த்தி சுரேஷ் ஆர்வம் கொண்டிருந்தார். இவருக்கு முதல் படமாக அமைந்தது கீதாஞ்சலி.

இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான கீதாஞ்சலி படத்தில்  மோகன்லாலுடன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்திருந்தார்.

மேலும் தமிழில் இவருக்கு முதல் திரைப்படமாக அமைந்தது இது என்ன மாயம். இப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இதன் பின் தமிழில் சிவகார்த்திகேயனுடன் ரஜினிமுருகன் மற்றும் ரெமோ போன்ற திரைப்படங்களில் நாயகியாக நடித்து பிரபலமானார்.

தற்போது கீர்த்தி சுரேஷ், தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி என பான் இந்திய மொழி படங்களில் பணியாற்றிவருகிறார்.

இவர் ஒரு திரைப்படத்தில் நாயகியாக நடிக்க எவ்வளவு கோடி சம்பளமாக பெறுகிறார் தெரியுமா? இவர் கிட்டத்தட்ட ரூ 4 முதல் ரூ 5 கோடிகள் வரை பெருகிறாராம்.