Credit: Instagram
19 November 2026
Credit: Instagram
தென்னிந்திய திரையுலகில் சிறந்த நடிகைகளில் ஒருவராக மக்கள் மத்தியில் எந்நாளும் புகழப்பட்டுவருபவர் கீர்த்தி சுரேஷ்.
இவர் மலையாள சினிமாவில் திரைப்படங்களில் நடித்து கதாநாயகியக தனது முதல் பயணத்தை சினிமாவில் ஆரம்பித்தார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் 2000ம் ஆண்டு தொடக்கத்தில் பைலட் என்ற மலையாள திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் நுழைந்தார்.
இவர் குழந்தை நட்சத்திரமாக அச்சனேயநிக்கிஷ்டம், குபேரன் போன்ற மலையாள படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 2013ம் ஆண்டில் மோகன்லாலின் நடிப்பில் வெளியான கீதாஞ்சலி என்ற ஹாரர் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.
கதாநாயகியாக தான் நடித்த முதல் படத்திலே ரெட்டை வேடத்தில் நடித்தார். இவரின் கீதாஞ்சலி என்ற படம் தமிழில் சாருலதா என ரீமேக் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து தமிழில் நடிகர் விக்கிரம் பிரபுவுக்கு ஜோடியாக, இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
இதன் பிறகு இவருக்கு தெலுங்கு சினிமாவில் நடிகையாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. அதன் பிறகு இந்தியிலும் நடிக்க தொடங்கினார்.
இந்தியில் இவரின் நடிப்பில் பேபி ஜான் என்ற திரைப்படமானது வெளியானது. இது தமிழில் வெளியான தெறி படத்தின் இந்தி ரீமேக் ஆகும்.
மேலும் இந்தியில் இவர் ராதிகா அப்தேவுடன் அக்கா என்ற வெப் தொடரில் நடித்திருந்த நிலையில், அதன் BTS புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.