02 Feb 2025
Credit: Instagram
நடிகையர் திலகம் படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர் கீர்த்தி சுரேஷ்.
மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார்.
இவர் நெற்றிக்கண் உள்ளிட்ட படங்களில் நடித்த மேனகாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கும் ஆண்டனி தட்டில் என்பவருக்கும் கடந்த 2024 டிசம்பரில் கோவாவில் திருமணம் நடைபெற்றது.
இருவரும் 15 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து திருமணம் செய்துள்ளனர்.
இந்த நிலையில் தனது திருமணம் குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நாங்கள் ஓடிப்போய் திருமணம் செய்யலாம் என நினைத்தோம், இப்படி ஒரு திருமணத்தை நாங்கள் கனவில் கூட நினைக்கவில்லை.
ஆனால் திருணம் நடந்தபோது பேச கூட முடியாத அளவுக்கு நெகிழ்ச்சியாக இருந்தது.
15 வருடங்களாக காத்திருந்த உறவு, அந்த 30 விநாடிகளில் முடிவுக்கு வந்தது. அவர் கண்ணீர் விடுவதை அன்றுதான் முதன்முறையாக பார்த்தேன்
கடந்த ஆண்டு ரிவால்வர் ரீட்டா என்ற படத்தின் மூலம் கவனம் ஈர்த்த கீர்த்தி சுரேஷ், தற்போது தோட்டம் என்ற படத்தில் நடித்து வருகிறார்