Credit: Instagram

01 october 2026

என் இதயத்தின் ஒரு சிறு பகுதி.. டோரதி படம் குறித்து கீர்த்தி சுரேஷ்!

Credit: Instagram

மலையாளம் சினிமாவின் மூலம் நடிகையாக நுழைந்து, தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளிலும் நாயகியாக  சுரேஷ்.

கடந்த 2000ம் ஆண்டு தொடக்க காலத்தில் மலையாளத்தில் வெளியான சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து திரைப்பயணத்தை தொடங்கினார்.

பின் 2013ம் ஆண்டில் மலையாள பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் இயக்கத்தில் வெளியான கீதாஞ்சலி என்ற படத்தின் மூலமாக லீட் நடிகையானார்.

தொடர்ந்து மலையாளம் மொழியில் நாயகியாக நடித்துவந்த இவர், 2015ம் ஆண்டில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக இது என்ன மாயம் என்ற தமிழ் படத்தில் நடித்தார்.

இதனை அடுத்ததாக இவருக்கு பேக் டூ பேக் தமிழ் திரைப்படங்கள் அமைந்தது. அதில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த முதல் தமிழ் படம் ரஜினி முருகன்.

கீர்த்தி சுரேஷ் தமிழில் முதல்வர் விஜய் முதல் சூர்யா உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்களுக்கு ஜோடியாக படங்களில் நடித்திருக்கிறார்.

மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் இவர் நாயகியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு மாபெரும் வரவேற்பை கொடுத்த படம் மகாநதி.

இதன் பிறகு இயக்குநர் அட்லீ தயாரிப்பில் வெளியான பேபி ஜான் என்ற படத்தில், வருண் தேவனுக்கு ஜோடியாக நடித்து இந்தியிலும் அறிமுகமானார்.

இவரின் நடிப்பிலும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்திலும் இறுதியாக திரியரங்குகளில் வெளியான திரைப்படம் டோரதி. இதில் பணியாற்றியது பற்றி கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ், டோரதி என் இதயத்தின் ஒரு சிறு பகுதியை எடுத்துக்கொண்டாள், என் இதயத்தின் ஒரு சிறு பகுதியை உங்கள் அனைவரிடமும் விட்டுச் சென்றிருப்பேன் என நம்புகிறேன் என கூறியுள்ளார்.