25 October 2026
Credit: Instagram
மலையாள சினிமாவில் கடந்த 2000-ம் ஆண்டு முதல் குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த இவர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் மலையாள சினிமாவில் நாயகியாக நடிக்கத் தொடங்கினார்.
தொடர்ந்து மலையாள சினிமாவில் நாயகியாக நடித்து வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் பிறகு மற்ற மொழிகளில் நடிக்கத் தொடங்கினார்.
அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு முதல் நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் நாயகியாக நடிக்கத் தொடங்கினார்.
தொடர்ந்து மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் மட்டும் இன்றி தெலுங்கு மொழியிலும் நாயகியாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் பிசியான நாயகியாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது இணையதள தொடர்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இந்தி மொழியில் தற்போது உருவாகி உள்ளது அக்கா என்ற இணையதள தொடர்.
இந்த தொடரில் நடித்தது குறித்தும் அப்போது இந்தி மொழி பேசுவதில் ஏற்பட்ட சிக்கல் குறித்தும் பேட்டி ஒன்றில் கீர்த்தி சுரேஷ் பேசியுள்ளார்.
அதில், இந்தி வசனங்களைச் சொந்தக் குரலில் பேசுவது, குறிப்பாகச் சரியான உச்சரிப்பது இலக்கணத்தைக் கையாள்வது கடினமாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்தப் பேட்டி தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாவது குறிப்பிடத்தக்கது.