Credit: Instagram
07 November 2026
Credit: Instagram
தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி பிரபலமாக இருந்துவருபவர் உலகநாயகன் கமல்ஹாசன்.
இவர் தமிழ் சினிமாவில் தனது சிறுவயதிலிருந்தே பணியாற்றியுள்ளார். மேலும் பல்வேறு நட்சத்திர நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.
கமல்ஹாசன் கடந்த 1974ம் ஆண்டில் வெளியான கன்னியாகுமாரி என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக சினிமாவில் நுழைந்தார்.
ஆனால் தமிழ் சினிமாவில் இவர் ஹீரோவாக முதல் படமாக அமைந்தது இயக்குநர் கே பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் திரைப்படம்.
இந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் ஹீரோவாகவே திரைப்படங்களில் நடித்து பல ஹிட் படங்கள் கொடுத்துள்ளார்.
இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பல்வேறு நட்சத்திர நடிகர்கர்களுடன் இணைந்து திரைப்படங்களில் பணியாற்றி ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
இவர் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக 1959 ஆண்டில் களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இவர் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் இணைந்து படங்களில் ஹீரோவாக பணியாற்றியிருக்கிறார்.
இவரின் இன்று (07/11/2026) தனது 72வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிவருகிறார். அந்த விதத்தில் அனிருத் மற்றும் கமலின் கைவசத்தில் உள்ள படங்கள் பற்றி பார்க்கலாம்.
இவர்களின் கூட்டணியில் இந்தியன் 3, KHxRK படம், சண்டியர் திரைப்படம் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் இயக்கத்தில் உருவாகும் படங்களில் இணைந்து பணியாற்றுகிறார்.