28 Dec 2025
Credit: Social Media
மஹாராஷ்டிராவை சேர்ந்தவர் பாக்யஸ்ரீ போர்ஸ்.
2024 ஆம் ஆண்டில் மிஸ்டர் பச்சன் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.
முதல் படத்திலேயே ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தார். இதனால் அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன.
இந்த ஆண்டு பாக்யஸ்ரீ போர்ஸின் மூன்று படங்கள் வெளியாகின.
பாக்யஸ்ரீ போர்ஸுக்கு 2025 ஆம் ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்தது.
கிங்டம், காந்தா மற்றும் ஆந்திரா கிங் தாலுகா என 3 படங்கள் வெளியாகின.
இந்த படங்கள் பாக்ஸ் ஆபிசில் வெற்றி பெறவில்லை என்றாலும் அவரது நடிப்பு ரசிகர்களிடையே பேசப்பட்டன.
குறிப்பாக காந்தா படத்தில் 60கள் காலக்கட்ட நடிகைகளை கண்முன் கொண்டு வந்தார்.
இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், 2025க்கு நன்றி. அன்பு, சிரிப்பு, கற்றல் நிறைந்த ஆண்டாக இருந்தது என்றார்.
தற்போது தெலுங்கில் அகிலுக்கு ஜோடியாக லெனின் படத்தில் நடித்து வருகிறார்.