Credit: Instagram
02 october 2026
Credit: Instagram
ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் தற்போது இளம் இயக்குநராக முதல் முதலில் இயக்கியுள்ள புதிய திரைப்படம்தான் சிக்மா.
தமிழக முதல்வர் விஜய்யின் மகனான இவர், தனது சிறுவயதிலே சினிமாவில் நுழைந்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
விஜய் நடித்திருந்த வேட்டைக்காரன் படத்தில் நா அடிச்சா தாங்கமாட்டா என்ற பாடலில் அவருடன் நடனமாடி தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.
இதன் பிறகு சினிமாவில் பெரிதாக எந்த திரைப்படங்களிலும், ஜேசன் சஞ்சய் பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தனது தந்தை விஜய் நடிக்கும் திரைப்படங்களின் ஷூட்டிங் செட் மற்றும் படப்பிடிப்பில் நடக்கும் பணிகளை பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தாராம்.
அந்த விதத்தில் சினிமாவில் எதாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் இன்று இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.
சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் ஜேசன் சஞ்சய் இயக்கிய முதல் திரைப்படம் தான் சிக்மா.
இதில் சந்தீப் கிஷன் மற்றும் தெலுங்கு நடிகை ஃபரியா அப்துல்லா போன்ற பிரபலங்கள் இணைந்து நடிக்க, இன்று (02/10/2026) வெளியாகியுள்ளது.
இப்படமானது வெளியாகி திரையரங்குகளில் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றுவருகிறது. மேலும் தனது சிறுவயது பழக்கம் குறித்து ஜேசன் சஞ்சய் கூறியுள்ளார்.
சமீபத்தில் சஞ்சய், என் யுஜி பட்டப்படிப்பு காலத்தில், எழுத்தின் மீது எனக்கு இருந்த ஆர்வத்தின் காரணமாக நான் திரைக்கதை எழுதினேன். சிறு வயதிலிருந்தே, கதை சொல்லும் செயல்முறையை நான் மிகவும் விரும்பினேன்.