25 Jan 2025

ஸ்ரீதேவியன் இளமை ரகசியம் இது தான் - ஜான்வி கபூர்

Credit: Instagram

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் கொடிகட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி. 

குறிப்பாக பாலிவுட்டில் முதல் லேடி சூப்பர் ஸ்டாராக ஸ்ரீதேவி அறியப்படுகிறார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு தனது 54 வயதில் காலமானார் ஸ்ரீதேவி. 

ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். அம்மாவைப் போலவே அவரும் நடிகையாக திரையுலகில் களமிறங்கியுள்ளார். 

பாலிவுட் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நடித்து வருகிறார். 

ஜூனியர் என்டிஆரின் தேவாரா படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.

தற்போது ராம் சரணுடன் இணைந்து பெத்தி படத்தில் நடித்து வருகிறார்.

தனது அம்மா ஸ்ரீதேவியின் இளமை ரகசியம் குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.

அவரது காலை உணவில் பழங்கள் தவறாமல் இடம் பெறும் என்றும் மீதமுள்ள பழங்களை அவர் முகத்தில் தடவிக்கொள்வார் என்றும் தெரிவித்தார்.

பழங்கள் முகத்தில் உள்ள பழைய செல்களை நீக்கி புத்துணர்வு அளிப்பதாகவும், அது தான் தனது அம்மாவின் இளமை ரகசியம் என்றும் தெரிவித்தார்.