09 Feb 2025 

டிரோல்களுக்கு முதன்முறையாக மமிதா பதில்

Credit: Instagram

வரதன், சூப்பர் சரண்யா உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்து வந்தவர் மமிதா பைஜூ.

இவருக்கு தென்னிந்திய அளவில் புகழைப் பெற்றுத் தந்த படம் பிரேமலு. 

அந்தப் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.  இதையடுத்து அவருக்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

தமிழில் ஜீவி பிரகாஷுக்கு ஜோடியாக ரிபெல் படத்தில் அறிமுகமானார். 

பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக இவர் நடித்த டுட் படத்தில் இவருக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தமிழில் விஜய், சூர்யா உள்ளிட்டோருடன் நடத்து வருகிறார்.

குறிப்பாக விஜய்யின் ஜனநாயகன் படத்தில் அவரது மகளாக நடித்துள்ளார்.

ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் எல்லா புகழும் பாடலின் சில வரிகளை பாடினார். 

இதனையடுத்து அவர் சமூக வலைதளங்களில் டிரோல் செய்யப்பட்டார். 

இதுகுறித்து முதன்முறையாக பதிலளித்த அவர், இதையெல்லாம் ஜாலியாக எடுத்துக்கொள்ள வேண்டியதுதான் என்றார்.