22 Dec 2025
Credit: Freepik
காய்கறிகளுக்கு நிகராக முட்டைகளுக்கு எப்போதும் நமது உணவில் ஒரு தனி இடம் உண்டு.
முட்டைகளில் புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின் பி போன்றவைகள் உள்ளன.
முட்டையில் உள்ள வைட்டமின் பி12, ஃபோலிக் அமிலம் மூளையின் செயல்பாட்டை சிறப்பாக செயலாற்ற வைக்கிறது.
முட்டையில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் டி உள்ளது
முட்டைகள் பசியைக் குறைக்க உதவுவதோடு, எடையை கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவும்.
அப்படிப்பட்ட, முட்டைகளில் புற்றுநோயை உருவாக்கும் 'நைட்ரோபியூரான்' என்ற ஆன்டிபயாடிக் மருந்துகள் இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
இதுகுறித்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (FSSAI) விளக்கமளித்துள்ளது.
இந்தக் கூற்றுகள் மக்களை தவறாக வழிநடத்துபவை என்றும் அறிவியல் அடிப்படையற்றவை எனவும் FSSAI கூறியுள்ளது.
நாட்டில் விற்கப்படும் முட்டைகள் முற்றிலும் சாப்பிட உகந்தவை, ஊட்டச்சத்து நிறைந்தவை.
வதந்திகளை நம்பாமல், வழக்கம்போல் முட்டைகளை தேவைக்கு ஏற்ப உண்ணலாம்.