08 May 2025
Credit: Freepik
நவீன வாழ்க்கையில் பலருடைய உறங்கும் மற்றும் விழிக்கும் நேரங்கள் சீர்குலைந்துள்ளன.
காலையில் சரியான நேரத்தில் எழுவது அனைவருக்கும் ஒரு அவசியமாகும்.
இதற்காக நீங்கள் பல அலாரங்களை அமைக்க வேண்டியிருந்தால், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
அலாரம் வைத்து முழிக்கும் பழக்கம் தூக்கத்தின் தரத்தைக் குறைப்பது முதல் மூளையைப் பலவீனப்படுத்தும்.
அலாரம் வைத்து விழிக்கும்போது ஏற்படும் மெதுவான எதிர்வினை, தற்காலிக நினைவாற்றல் மற்றும் சிந்தனைக் குறைபாடுகள், மனநிலை மாற்றங்கள் ஏற்படும்.
காலையில் எழுவதை விட சரியான நேரத்தில் உறங்கச் செல்வது மிகவும் முக்கியம்.
நமது உடல்கள் சர்க்காடியன் தாளம் என்ற ஒரு குறிப்பிட்ட சுழற்சி முறையில் இயங்குகின்றன.
இது வளர்சிதை மாற்றம் முதல் பசி, ஹார்மோன்கள், மனநிலை மற்றும் உடல் வெப்பநிலை வரை அனைத்தையும் ஒழுங்குபடுத்தும்.
உங்கள் தூக்கப் பழக்கங்களைக் கண்காணிக்கவும். ஒரே நேரத்தில் படுக்கைக்குச் செல்வதும் எழுவதும் மிகவும் முக்கியம்.
அதன்படி, அலாரம் வைக்கும் பழக்கத்திற்கு பதிலாக தினமும் காலை ஒரே நேரத்தில் எழும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்.