14 OCT 2026
Credit: Getty
iQOO நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வகையில் தான், தனது iQOO 16 ஸ்மார்ட்போனை இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது.
இந்தியாவில் குவால்கம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் எக்ஸ்ட்ரீம் ஜென் 6 சிப்செட் அம்சத்தை கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக இது இருக்கும்.
இந்த ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் அம்சத்தை கொண்டு இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 6.85 இன்ச் AMOLED ஸ்கிரீன், 1440 3168 பிக்சல் உடனான Sharp 2K Resolution அம்சத்தை கொண்டு இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் பின்பக்கத்தில் மூன்று தனித்தனி 50 மெகாபிக்சல் சென்சார் உடன் கூடிய மூன்று கேமரா செட் அப்பை கொண்டுள்ளது.
இதில் பிரைமரி கேமரா, அல்ட்ரா வைட் கேமரா மற்றும் பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் அதிகபட்சமாக 8,400 mAh பேட்டரி அம்சத்தை கொண்டுள்ளது. பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் 5,000 mAh முதல் 7,000 mAh பேட்டரி மட்டுமே கொண்டுள்ளன.
இந்த ஸ்மார்ட்போன் 100 வாட்ஸ் சார்ஜிங் அம்சத்தை கொண்டுள்ள நிலையில், சார்ஜ் செய்வது மிகவும் சுலபமாக இருக்கும்.
இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.