16 Dec 2025
Credit: X
2026 ஐபிஎல் ஏலத்தில் மொத்தம் ரூ.215.45 கோடி செலவிடப்பட்டு, 10 அணிகளும் சேர்ந்து 77 வீரர்களை வாங்கியுள்ளன.
ஐபிஎல் மினி ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையை பெற்றார் கேமரூன் க்ரீன்.
கேமரூன் க்ரீனை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ. 25.20 கோடிக்கு வாங்கியது.
இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதிஷா பத்திரனாவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ. 18 கோடிக்கு வாங்கியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அன்கேப்டு வீரரான பிரசாந்த் வீரை ரூ. 14.2 கோடிக்கு வாங்கியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ. 14.20 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்து கார்த்திக் சர்மாவை தங்கள் அணியில் சேர்த்தது.
இங்கிலாந்து ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டோனை ஹைதராபாத் ரூ. 13 கோடிக்கு வாங்கியது.
வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ. 9.20 கோடிக்கு வாங்கியது.
ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜோஷ் இங்கிலிஸை ரூ. 8.6 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வாங்கியது.
ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் ஜம்மு காஷ்மீர் வீரரான ஆகிப் நபி தரை டெல்லி கேபிடல்ஸ் ரூ. 8.4 கோடிக்கு வாங்கியது.