17 AUG 2025
Credit: Apple
ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த மாடல் ஸ்மார்ட்போனான ஆப்பிள் ஐபோன் 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது.
2025 ஆம் ஆண்டு ஆப்பிள் ஐபோன் 17 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அதேபோல 18 சீரீஸ் ஸ்மார்ட்போனும் செப்டம்பரில் அறிமுகமாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஐபோன் 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கான எதிர்ப்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில், அதிர்ச்சி அளிக்க கூடிய முக்கிய தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது.
அதாவது, இந்தியாவில் 2025 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 17 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை விடவும் ஐபோன் 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது.
மெமரி சிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதன் காரணமாக ஸ்மார்ட்போன் நிறுவனங்க, தங்களின் ஸ்மார்ட்போன்களின் விலைகளை அதிரடியாக உயர்த்தி வருகின்றன.
அந்த வகையில் தான் ஆப்பிள் நிறுவனமும் தனது ஆப்பிள் 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கான விலையை உயர்த்த உள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது, ஐபோன் 18 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.1,39,900-க்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஐபோன் 17 ப்ரோவை விட ரூ.5,000 அதிகம்.
2025 ஆம் ஆண்டு ஐபோன் 17 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.1,34,900-க்கு மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், மெமரி சிப் சிக்கல் காரணமாக விலை உயர்த்தப்படலாம் என கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க ஐபோன் 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை விலை உயர்வை சந்திக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐபோன் 18 ப்ரோ ரூ.1,44,900-க்கும், ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் ரூ.1,54,900-க்கும் அறிமுகமாகும் என கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.