01 SEP 2026
Credit: GETTY
செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் ஆதிக்கம் அனைத்து துறைகளிலும் பரவலாக உள்ளது. அதிலும் குறிப்பாக சமூக ஊடகங்களில் மிக அதிகமாகவே உள்ளது.
தற்போது இன்ஸ்டாகிராம், யூடியூப் ஆகிய தளங்களை திறந்தாலே செயற்கை நுண்ணறிவு அம்சத்தால் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் தான் அதிகம் உள்ளன.
இதன் காரணமாக பயனர்கள் எது உண்மையான வீடியோ, எது செயற்கை நுண்ணறிவு அம்சத்தால் உருவாக்கப்பட்டது என தெரியாமல் குழம்புகின்றனர்.
இந்த நிலையில் தான், பயனர்களின் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
அதாவது, இன்ஸ்டாகிராம் தளத்தில் "AI Creator" என தோன்றும் லேபிளுக்கு பதிலாக, "AI Generated Profile" என மாற்றம் செய்ய உள்ளது.
அதுமட்டுமன்றி, ஏஐ வீடியோக்களை பதிவிடும் நபர்கள் தங்களது அடையாளத்தை வெளிக்காட்டவில்லை என்றால் அவர்களது ரீச்சை கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளது.
மே மாதத்தில் ஏஐ வீடியோ பதிவிடும் கணக்குகளுக்கு இந்த "AI Generator Profile" லேபிளை மாற்றும் சோதனையில் மெட்டா ஈடுபட்டது.
அப்போது அந்த அம்சம் முற்றிலும் ஆப்ஷனல் என்றும், அந்த ப்ரொஃபைல் ரீச்சாவதற்கு எந்த வித சிக்கலும் ஏற்படாது என அறிவித்திருந்தது.
ஆனால், தொடர்ந்து ஏஐ வீடியோக்களால் ஏற்படும் சிக்கல்கள் காரணமாக இன்ஸ்டாகிராம் தற்போது இந்த கடுமையான நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.
பல்வேறு பயனர்கள் ஏஐ கணக்குகளை கண்டுபிடிப்பது சிரமமாக உள்ளதாக கூறிய நிலையில், இந்த மாற்றத்தை மேற்கொள்வதாக இன்ஸ்டாகிராம் கூறியுள்ளது.