05 OCT 2026

Credit: Getty

மீண்டும் பண பரிவர்த்தனைக்கு மாறும் பொதுமக்கள் : காரணம்?

இந்தியர்கள் மத்தியில் கையில் பணம் வைத்து செலவு செய்யும் பழக்கம், பெருமளவு குறைந்துவிட்டது. பலரும் தங்களது அன்றாட பண பரிவர்த்தனைகளை யுபிஐ செயலிகள் மூலமே மேற்கொள்கின்றனர். 

யுபிஐ

விரைவில் பண பரிமாற்றம், எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்பலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களே இதற்கு காரணம்.

சிறப்புகள்

பெட்டிக் கடைகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை என அனைத்து இடங்களிலும் யுபிஐ உள்ளதால் பொதுமக்கள் கையில் பணத்தை வைத்து செலவு செய்வதையே விட்டுவிட்டனர். 

பண செலவு

இவ்வாறு இந்தியா முழுவதும் எங்கு பார்த்தாலும், யுபிஐ பயன்பாடு பரவியுள்ள நிலையில் தான், தற்போது மக்கள் மீண்டும் கையில் பணத்தை வைத்து செலவு செய்ய தொடங்கியுள்ளனர்.

பண பரிவர்த்தனை

இவ்வாறு பொதுமக்கள் யுபிஐ பயன்படுத்துவதை தவிர்த்து கையில் பணத்தை வைத்து செலவு செய்ய தொடங்கியதற்கு முக்கிய காரணம் ஒன்று உள்ளது. அதுதான் எம்டிஆர். 

எம்டிஆர்

மத்திய அரசு இந்தியாவில் எம்டிஆர் (MDR - Merchant Discount Rate) கட்டணத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. 

விரைவில் அறிமுகம்

இந்த எம்டிஆர் கட்டணத்தின் மூலம் வணிக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறும் ரூ.2,000-க்கும் மேலான யுபிஐ பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். 

பரிவர்த்தனை

இந்த எம்டிஆர் கட்டணம் அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் பொருந்தாது. மாறாக, மாதத்திற்கு குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருமானம் ஈட்டும் நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். 

குறிப்பிட்ட நிறுவனங்கள்

இந்த கட்டணத்தை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூல் செய்ய கூடாது என அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. இருப்பினும் மறைமுகமாக கட்டணம் விதிக்கப்படுமா என் பொதுமக்கள் மத்தியில் அச்சம் உள்ளது.

அச்சம்

இந்த நிலையில் தான், பெரும்பாலான பொதுமக்கள் யுபிஐ பண பரிவர்த்தனை முறையை விடுத்துவிட்டு மீண்டும் கையில் பணம் வைத்து செலவு செய்ய தொடங்கியுள்ளனர். 

மீண்டும்