21 Jan 2025
நாட்டின் 77-வது குடியரசு தினம் வருகிற 26ம் தேதி கொண்டாடப்பட உள்ளது
டெல்லியில் உள்ள கடமை பாதையில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்படும்.
ராணுவம், கடற்படை மற்றும் விமான படை அணிவகுப்பு, அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறும்.
இந்த ஆண்டு புதுமையாக, விலங்குகள் படைப்பிரிவு சேர்க்கப்பட உள்ளது
இந்த படைப்பிரிவில் இரட்டைத்திமில் ஒட்டகங்கள், மலை ஏறும் திறன் கொண்ட 4 குதிரைகள் இடம்பெறும்
ராப்டர் பறவைகள் எதிரிகளை கண்காணிக்கும் திறன் கொண்டவை.
தற்போது பணியில் உள்ள 16 நாய்கள் மற்றும் 4 ராப்டர் பறவைகள் போன்றவை இடம்பெறுகின்றன.
இரட்டைத்திமில் ஒட்டகங்கள், மலையேற்ற குதிரைகள் இமயமலைப் பகுதிகளில் கடும் குளிரிலும் பாரங்களை சுமந்து பயணம் செய்யும் திறன் கொண்டவை
16 நாய்களில் சிப்பிப்பாறை, கோம்பை, ராஜபாளையம் போன்ற தமிழ்நாட்டு நாய் இனங்களும் இடம்பெற்றிருப்பது சிறப்பமானது.