16 Dec 2025

ஜனநாயகன் படத்திலிருந்து வெளியான முக்கிய அப்டேட்! 

Credit: Social Media

தளபதி விஜய்யின் கடைசி படமாக உருவாகியுள்ள படம் ஜனநாயகன்

இந்தப் படம் வருகிற 2026, ஜனவரி 9 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, மமிதா பைஜு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் முதல் பாடலான தளபதி கச்சேரி பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தீரன் அதிகாரி ஒன்று, துணிவு போன்ற படங்களின் இயக்குநர் எச்.வினோத் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் சேட்டிலைட் உரிமையை ஜி தமிழ் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற டிசம்பர் 27, அன்று மலேசியாவில் நடைபெறவிருக்கிறது.

விஜய்யின் கடைசி படம் என்பதால் கோலிவுட்டின் முக்கிய நட்சத்திரங்கள் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

இந்தப் படத்தின் ரன் டைம் 3 மணி நேரம் 9 நிமிடங்கள் ஓடக்கூடியது என தகவல் வெளியாகியுள்ளது.