Credit: Instagram

23 october 2026

ராமாயணத்தில் ராவணனாக முதலில் நடிக்கவிருந்தவர் இவரா?

Credit: Instagram

பான் இந்திய சினிமாவே 2026ம் ஆண்டு தீபாவளிக்கும் மிகப் பிரம்மாண்டமாக எதிர்பார்க்கும் படம்தான் ராமாயணா பார்ட் 1.

இந்த திரைப்படத்தை பாலிவுட் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்க, அவருடன் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா இணைந்து பணியாற்றியுள்ளார்.

இந்த படத்திற்காக இயக்குநர் நிதேஷ் திவாரி மற்றும் நமித் மல்ஹோத்ரா இருவருமே கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாகப் பணியாற்றியுள்ளனர்.

இந்த படமானது இந்துக்களில் புராண கதையான இராமாயணத்தின் கதையை மையப்படுத்தி, புதுவித தொழில்நுட்பங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ராமாயணா பார்ட் 1 திரைப்படத்தில் ஸ்ரீ ராமராக பாலிவுட் முன்னணி நடிகர் ரன்பீர் கபூர் நடித்துள்ளார்.

ராமாயணா படத்தில் சீதையாக தமிழ் நடிகை சாய் பல்லவி நடிக்க, இலங்கை மன்னன் ராவணனாக நடிகர் யாஷ் நடித்திருக்கிறார்.

கன்னட நடிகர் யாஷ் இந்த படத்தில் வில்லனான ராவணன் வேடத்தில் நடித்திருக்கும் நிலையில், இந்த கதாபாத்திரத்தின் மீது எதிர்பார்ப்பு உள்ளது.

யாஷ் இந்த திரைப்படத்தில் வில்லனான ராவணன் வேடத்தில் நடித்திருக்கும் நிலையில், இதில் நடிப்பதற்கு ரூ 50 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம்.

இந்த படமானது இரு பாகங்களாக உருவாக்கப்பட்டுவரும் நிலையில், முதல் பாகம் 2026ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதியில் வெளியாகிறது.

யாஷ் நடித்திருந்த ராவணன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா? அது இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன்தான்.