20 Nov 2026
Credit: Getty
உங்கள் ஈறுகள் வீங்கியிருந்தால், உங்களால் சாப்பிட முடியாமல் போகலாம். அதேநேரத்தில், குளிர்ச்சியான உணவுகளையும் எடுத்துக்கொள்ள முடியாது.
அதன்படி, ஈறு வீக்கத்திற்கான எளிய வீட்டு வைத்தியங்கள் உள்ளன. இந்த சில பொருட்களை பயன்படுத்துவது விரைவாக குணமடைய உதவும்.
உப்பு நீர் வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, ஈறுகளை சுத்தப்படுத்தி வலியை குறைக்க உதவுகிறது.
கற்றாழையின் அழற்ஜி எதிர்ப்பு பண்புகள் ஈறுகளில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கின்றன.
ஈறுகளில் கிராம்பு எண்ணெயை தடவுவதால், பல் மற்றும் ஈறு பிரச்சனைகளுக்கு உடனடி நிவாரணத்தை தரும்.
உங்கள் ஈறுகள் வீங்கியிருந்தால், பனிக்கட்டியை பயன்படுத்துவது வீக்கத்தையும் வலியையும் குறைக்கும்.
கொய்யா இலையின் பயன்பாடு வாய் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடி, ஈறுகளில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும்.
மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகளால், மஞ்சள் விழுது அல்லது ஜெல்லை உங்கள் ஈறுகளில் தடவுவது நிவாரணம் அளிக்கும்.
மிகவும் சூடான, காரமான, அமிலத்தன்மை கொண்ட, அல்லது கடினமான மற்றும் மொறுமொறுப்பான உணவுகளை உண்பதைத் தவிர்க்கவும்.
புகையிலை, மதுபானம், மற்றும் ஆல்கஹால் அல்லது கடுமையான இரசாயனங்கள் அடங்கிய வாய் கொப்பளிக்கும் திரவங்களைத் தவிர்க்கவும்.