07 Apr 2025
Credit: Getty
குழந்தைகளை இமைப்பொழுது கூட பிரியாமல் பெற்றோர்கள் எப்போதும் மிகுந்த கவனத்துடன் கண்காணிக்க வேண்டும்.
ஒன்று முதல் மூன்று வயதுள்ள குழந்தைகள் பொருட்களை வாயில் போடும் பழக்கம் கொண்டதால் விழிப்புணர்வு தேவை
சிறிய மற்றும் வட்ட வடிவப் பொருட்கள் தவறுதலாக மூச்சுக்குழாயில் சிக்கி உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும்.
வேர்க்கடலை, நட்ஸ் மற்றும் சிக்கன் துண்டுகளை அப்படியே தராமல் மாவுப் பதத்தில் தயாரித்து வழங்குவது சிறந்தது.
குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும்போது மீன் முட்கள் மற்றும் தேங்காய் துண்டுகள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்யவும்.
பேட்டரி, காந்தம் மற்றும் கூர்மையான முனைகள் கொண்ட பொம்மைகளை குழந்தைகள் கையில் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
மண்ணெண்ணெய், சுத்தம் செய்யப் பயன்படும் திரவங்கள் மற்றும் மருந்துகளைக் குழந்தைகளின் கைக்கு எட்டாதவாறு வைக்கவும்.
சுடுதண்ணீர் மற்றும் வடித்த கஞ்சி போன்றவற்றை குழந்தைகள் அணுக முடியாத உயரத்தில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
குழந்தைக்கு மூச்சுத்திணறல், அதிக இருமல் அல்லது வாந்தி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்
பொம்மைகளை வாங்கும் முன் அதன் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள வயது வரம்பு மற்றும் எச்சரிக்கை வாசகங்களைக் கவனிக்க வேண்டும்