16 OCT 2026

ஒருமுறை பொரித்த ஆயிலை மீண்டும் பயன்படுத்தலாமா?

Credit:freepik

பொரித்த சமையல் எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

மறுபயன்பாடு

எண்ணெயை மீண்டும் சூடாக்கும்போது அதன் தரம் மாறி, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் சேர்மங்கள் உருவாகலாம்.

உடல்நலம்

பயன்படுத்திய எண்ணெயைத் தொடர்ந்து உணவில் சேர்ப்பது இதய ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.

இதய பாதிப்பு

 எண்ணெயை மீண்டும் பயன்படுத்த வேண்டிய சூழலில், அதிலுள்ள உணவுத் துகள்களை நன்றாக வடிகட்ட வேண்டும்.

வடிகட்டுதல்

ஒருமுறை பொரிக்கப் பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பொரிப்பதற்குப் பதிலாக,  குழம்பு அல்லது தாளிப்பில் பயன்படுத்தலாம்.

சமையல் முறை

மீதமுள்ள எண்ணெயை காற்றுப் புகாத தனி கண்ணாடி கொள்கலனில் சேமிக்க வேண்டும்.

பாதுகாப்பு

பயன்படுத்திய எண்ணெயை குளிர்ச்சியான, உலர்ந்த இடத்தில் வைத்து, நீண்ட நாட்கள் சேமிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

சேமிப்பு

பயன்படுத்திய எண்ணெயை முடிந்தவரை ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள் பயன்படுத்திவிடுவது நல்லது.

காலவரம்பு

எண்ணெய் மிகவும் கருமையாகவோ, கலங்கலாகவோ மாறினால் அதை மீண்டும் பயன்படுத்தக் கூடாது.

நிறமாற்றம்

எண்ணெயில் அதிக நுரை தோன்றினாலோ, நீலச்சாம்பல் நிறப் புகை வந்தாலோ அல்லது அதன் அடர்த்தி மாறினாலோ அதைத் தவிர்க்க வேண்டும்.

எச்சரிக்கை