29 Oct 2026

உடற்பயிற்சி இல்லாமல் தொப்பையை குறைப்பது எப்படி..?

Credit: Freepik

உடற்பயிற்சி செய்ய உங்களுக்கு நேரம் இல்லாவிட்டாலும், சில வாழ்க்கை முறை மாற்றங்களை செய்து உடல் எடையை குறைக்கலாம்.

உடற்பயிற்சி

அதன்படி, உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைப்பது எப்படி என்று பார்ப்போம்.

உடல் எடை

உடல் எடை அதிகரிப்பதற்கு நமது உணவுமுறையே முக்கிய காரணமாகும். எனவே, நமது உணவு முறையில் மாற்றங்களை செய்யலாம்.

உணவு முறை

அதிக கலோரி கொண்ட எண்ணெய் நிறைந்த இனிப்பு சுவையுடைய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிருங்கள்.

இனிப்பு சுவை

நீங்கள் தினசரி எடுத்துக்கொள்ளும் உணவில் பாதியளவு காய்கறிகள் இடம்பெற வேண்டும்.

காய்கறிகள்

சர்க்கரை, வெள்ளை ரொட்டி, பிஸ்கட் போன்ற சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்து பொருட்களின் உட்கொள்ளலை குறைக்கவும்.

மாவுச்சத்து

தினமும் 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடியுங்கள். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடல் எடையை கட்டுப்படுத்த உதவும். 

வளர்சிதை

தினமும் 7 முதல் 8 மணிநேரம் தூக்கம் முக்கியம். தூக்கமின்மை உடல் எடை அதிகரிப்புக்கு காரணமான ஹார்மோன்களை செயல்படுத்துகிறது.

ஹார்மோன்

நீங்கள் உடற்பயிற்சி செய்யாவிட்டாலும், நடைப்பயிற்சி அல்லது சைக்கிளிங் செய்வதன் மூலம் உங்கள் உடல் எடையை குறைக்கலாம்.

நடைப்பயிற்சி

இவ்வாறு செய்வது எளிதாக தொப்பையை குறைக்க உதவி செய்யும். 

தொப்பை