23 May 2025

அடம்பிடிக்கும் குழந்தைகளை அடிக்காமல் எப்படி வளர்ப்பது? 

Credit: Getty

குழந்தைகள் பிடிவாதம் பிடிக்கும் போது நாமும் கோபப்படாமல் அமைதியாக இருக்க வேண்டும். நமது நிதானமே அவர்களின் ஆத்திரத்தை முதலில் கட்டுப்படுத்த உதவும். .

பொறுமை

அவர்கள் ஏன் அடம் பிடிக்கிறார்கள் என்பதன் பின்னணியில் உள்ள காரணத்தைக் கண்டறிய வேண்டும். பசி, தூக்கமின்மை அல்லது சோர்வு கூட அவர்களின் பிடிவாதத்திற்குக் காரணமாக இருக்கலாம். .

கவனம்

அடித்தால் பயம் மட்டுமே மிஞ்சும், ஒழுக்கம் வராது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அன்பான வார்த்தைகளும் மென்மையான அரவணைப்பும் அவர்கள் பிடிவாதத்தைக் குறைக்கும். .

அன்பு

அவர்களின் கோபம் தணிந்த பிறகு, தவறைப் பற்றி நிதானமாகப் பேச வேண்டும். எது சரி, எது தவறு என்பதை அவர்களுக்குப் புரியும் படி எடுத்துரைக்க வேண்டும். .

பேச்சு

குழந்தை ஒரு பொருளுக்காக அடம் பிடிக்கும் போது அவர்களின் கவனத்தை திசைதிருப்ப வேண்டும். வேறு ஒரு சுவாரசியமான விஷயம் அல்லது விளையாட்டிற்கு அவர்களை மாற்றலாம். .

மாற்றம்

அனைத்து விஷயங்களிலும் நம் முடிவை திணிக்காமல் அவர்களுக்குச் சிறிய தேர்வைக் கொடுக்கலாம். இரண்டு ஆடைகளைக் காட்டி அதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கச் சொல்லலாம். .

சுதந்திரம்

அவர்கள் நல்ல விஷயங்களைச் செய்யும் போது மனதாரப் பாராட்டத் தவறக் கூடாது. இந்தப் பாராட்டு, அவர்கள் மீண்டும் பிடிவாதம் பிடிக்காமல் நல்ல முறையில் நடக்கத் தூண்டும். .

பாராட்டு

அவர்கள் நல்ல விஷயங்களைச் செய்யும் போது மனதாரப் பாராட்டத் தவறக் கூடாது. இந்தப் பாராட்டு, அவர்கள் மீண்டும் பிடிவாதம் பிடிக்காமல் நல்ல முறையில் நடக்கத் தூண்டும். .

பாராட்டு

மற்ற குழந்தைகளுடன் நம் குழந்தையை ஒருபோதும் ஒப்பிட்டுப் பேசக் கூடாது. அது அவர்களின் மனதில் தாழ்வுமனப்பான்மையையும் கூடுதல் கோபத்தையும் மட்டுமே உருவாக்கும். .

ஒப்பீடு

பெற்றோர்களாகிய நாமே அவர்களுக்குச் சிறந்த முன்மாதிரியாக வாழந்து காட்ட வேண்டும். நாம் வீட்டில் அமைதியாகவும் மரியாதையாகவும் நடந்துங்கள். .

முன்மாதிரி