16 July 2025

வயதாவதை காட்டிக்கொடுக்கும் கண்கள் : பாதுகாப்பது எப்படி?

Credit: GETTY

பெண்களுக்கு வயதாவதை கண்கள் எளிதாக காட்டிக் கொடுத்துவிடும். கண்களை சுற்றி ஏற்படும் சுருக்கங்கள், வீக்கம் உள்ளிட்டவை வயதான தோற்றத்தை தரும்.

கண்கள்

கண்கள் வயதான தோற்றத்தை காட்டாமல் இருக்க சில வழிகள் உள்ளன. அதாவது கண்களை முறையாக பராமரிப்பதன் மூலம் அதனை தடுக்க முடியும். 

பராமரிப்பு

பெரும்பாலான பெண்கள் கண்களுக்கு மேக்அப் போடுவதில் காட்டும் ஆர்வத்தை, அதனை கலைப்பதற்கு காட்டுவதில்லை. அதுதான் பெரிய காரணமாக உள்ளது. 

மேக்அப்

கண்களில் காஜல் பயன்படுத்தும் பெண்கள் அதனை துடைக்கும்போது கடுமையாக செய்கின்றனர். அவ்வாறு செய்யும்போது சருமம் கடுமையாக பாதிக்கப்படும். 

கடுமை 

கண்களில் போடும் மேக்அப்பை Micellar Water கொண்டு மிகவும் மென்மையாக துடைத்து எடுப்பதுதான் கண்களை சுத்தம் செய்ய சிறந்த வழி. 

சரியான முறை

பலரும் சன்ஸ்கிரீன் போடும்போது கண்களை சுற்றியுள்ள பகுதிகளை மறந்திவிடுகிறார்கள். மற்ற பகுதிகளில் சன்ஸ்கிரீன் போட்டுவிட்டு, கண்களை சுற்றி போடாமல் இருப்பது வெயிலின் தாக்கத்தை ஏற்படுத்தும். 

சன்ஸ்கிரீன்

இரவில் தூங்கும் முன்பு சரியான ஈரப்பதம் உள்ள கிரீம்களை பயன்படுத்துவது கண்களை சுற்றி ஏற்படுத்தும் சுருக்கங்களை குறைக்க உதவும்.

ஈரப்பதம்

கண்களை சுற்றியுள்ள சுருக்கங்களை நீக்க ரெட்டினால் ஒரு சிறந்த மருந்தாக செயல்படுகிறது. அதனை பயன்படுத்துவது பலனை தரும். 

ரெட்டினோல் 

பெட்டை கலந்த அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் உள்ள செல்கள் புத்துயிர் பெறும். அவற்றை, ரெட்டினால் உடன் கலந்து பயன்படுத்தலாம். 

பெப்டைடுகள் 

மனிதர்கள் விரைவில் வயதான தோற்றத்தை பெறுவதற்கு தூக்கம் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது. 8 மணி நேரம் தூங்குவது உடலுக்கும், சருமத்திற்கும் ஆரோக்கியம் தரும்.

தூக்கம்