18 May 2025

உடல் எடை ஏறுவதைத் தடுப்பது எப்படி?

Credit: Getty

உடல் எடையைக் குறைப்பதை விட, குறைந்த எடையை நீண்ட காலத்திற்குத் தக்கவைப்பதே மிகப்பெரிய சவாலாகும்.

சவால்

இத்தாலி பல்கலைக்கழகப் பேராசிரியர் மர்வான் தலைமையிலான குழுவினர் எடை பராமரிப்பு குறித்து விரிவான ஆய்வு நடத்தினர்.

ஆராய்ச்சி

தினமும் 10,000 நடைகள் நடப்பது கடினமாகத் தோன்றினாலும், 8,500 நடைகள் என்பது சாத்தியமான இலக்காகும்.

இலக்கு

வெறும் உணவுக் கட்டுப்பாட்டை மட்டும் செய்தவர்களை விட, நடைப்பயிற்சியை அதிகரித்தவர்கள் எடையைச் சீராக வைத்திருந்தனர்.

நடைப்பயிற்சி

தினமும் 8,500 நடைகள் நடப்பவர்கள் சுமார் 3 முதல் 4 கிலோ எடை மீண்டும் கூடுவதைத் தவிர்க்கிறார்கள்.

பராமரிப்பு

அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ இருக்கும்போது ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் எழுந்து ஐந்து நிமிடங்கள் நடக்க வேண்டும்.

இயக்கம்

லிஃப்ட் வசதி இருந்தாலும், ஓரிரு தளங்களுக்கு மட்டும் செல்ல வேண்டியிருந்தால் படிக்கட்டுகளைப் பயன்படுத்துவது கலோரிகளை எரிக்கும்.

மாற்றம்

தொலைபேசியில் பேசும்போது ஒரே இடத்தில் அமர்ந்திருக்காமல், அறையிலேயே குறுக்கும் நெடுக்கும் நடப்பதைப் பழகிக் கொள்ளலாம்.

பேச்சு

எடை குறைந்த பிறகு பழைய உணவு முறைக்குத் திரும்புவதுதான் எடை மீண்டும் அதிகரிப்பதற்குக் காரணமாக அமைகிறது.

உணவு

உடல் பருமன் சிகிச்சையில் எடை மீண்டும் கூடுவதைத் தடுப்பதுதான் மருத்துவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலான காரியம்.

தீர்வு