11 Apr 2025
Credit: Freepik
வெப்பத்தில் பாக்டீரியாக்கள் அதிகமாக செயல்படுவதால், தயிர் விரைவில் புளித்துவிடும்.
தயிரில் ஒரு துண்டு தேங்காயை சேர்ப்பது, நீண்ட நேரம் புத்துணர்ச்சியுடன் வைக்கும்.
பாலை நன்றாக கொதிக்க வைத்த பிறகு, இளஞ்சூடாக இருக்கும்போது உறை மோர் சேர்க்கவும்.
உறை மோரை மிகவும் சூடான பாலில் சேர்க்கும்போது, தயிர் புளித்து நீர்த்து போகும்.
பாலில் ஒருபோதும் அதிகப்படியான புளித்த தயிரை பயன்படுத்தாதீர்கள்.
5 முதல் 7 மணிநேரத்தில் தயிர் உறைந்தவுடன், உடனடியாக அதை ப்ரிட்ஜில் வைக்கவும்.
சில்வர் அல்லது பிளாஸ்டிக்கை காட்டிலும் கண்ணாடி பாத்திரத்தில் தயிர் சுவையாக இருக்கும்.
தயிரை எப்போதும் மூடி, ப்ரிட்ஜின் நடு டிராயரில் வைக்க வேண்டும்.
தயிர் மிகவும் புளித்துவிட்டால், அதில் 1 முதல் 2 ஸ்பூன் குளிர்ந்த பாலை சேர்க்கவும்.
நன்றாக புளித்த தயிராக இருந்தால் மோர் குழம்பு அல்லது தயிர் சாதம் செய்யலாம்.