07 Nov 2026
Credit: Unsplash
250 கிராம் கடலை மாவு, 500 கிராம் சர்க்கரை, 300 கிராம் நெய், 150 மி.லி. எண்ணெய் மற்றும் 200 முதல் 250 மி.லி. தண்ணீர் எடுத்துக்கொள்ளவும்.
2. கடலை மாவை முதலில் சல்லடையில் நன்றாகச் சலித்து, அதிலுள்ள கட்டிகளை நீக்கிக்கொள்ள வேண்டும்.
கடாயில் சிறிதளவு நெய் சேர்த்து, கடலை மாவை குறைந்த தீயில் பச்சை வாசனை போகும் வரை லேசாக வறுக்க வேண்டும்.
300 கிராம் நெய் மற்றும் 150 மி.லி. சமையல் எண்ணெயை ஒன்றாகச் சேர்த்து மிதமான சூட்டில் சூடாக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
அகலமான கடாயில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து, சர்க்கரை முழுவதுமாகக் கரையும் வரை கிளற வேண்டும்.
சர்க்கரைப் பாகு கொதித்ததும் விரல்களுக்கு இடையில் தொட்டுப் பார்க்கும்போது மெல்லிய கம்பி போன்று வரும் பதத்தை அடைய வேண்டும்.
தயாராக வைத்துள்ள கடலை மாவை சர்க்கரைப் பாகில் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து, கட்டிகள் உருவாகாமல் தொடர்ந்து கிளற வேண்டும்.
சூடாக்கி வைத்துள்ள நெய் மற்றும் எண்ணெய்க் கலவையை சிறிது சிறிதாக ஊற்றி, மாவு நன்றாகக் கலக்கும் வரை தொடர்ந்து கிளற வேண்டும்.
கலவை கெட்டியாகி சிறிய துளைகள் தோன்றி, நெய் ஓரங்களில் பிரிந்து வரத் தொடங்கும்போது சரியான பதத்தை அடைந்திருப்பதை அறியலாம்
நெய் தடவிய தட்டில் தயாரான கலவையை உடனடியாக ஊற்றி சமப்படுத்தி, ஓரளவு சூடாக இருக்கும்போதே விரும்பிய வடிவில் வெட்டிக்கொள்ள வேண்டும்.