24 AUG 2025

ஈஸியாக வாழைப்பழ கேக் செய்வது எப்படி..?

Credit: Freepik

அதிக சிரமமின்றி வீட்டிலேயே சுவையான மற்றும் மென்மையான கேக்குகளை செய்ய விரும்புகிறீர்களா..?

மென்மை

வீட்டிலேயே வாழைப்பழ கேக் செய்வது மிகவும் எளிதானது.

எளிது

முதலில் பழுத்த வாழைப்பழங்களின் தோலை உரித்து, ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக மசிக்கவும்.

மசித்தல்

மசித்த வாழைப்பழங்களுடன் சர்க்கரை, எண்ணெய் அல்லது உருக்கிய வெண்ணெய் மற்றும் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து பாலுடன் நன்றாக கலக்கவும்.

எசென்ஸ்

மற்றொரு கிண்ணத்தில் மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா மற்றும் உப்பு ஆகியவற்றை சலித்து, அவற்றை மாவுக்கலவையுடன் படிப்படியாக சேர்க்கவும்.

பேக்கிங் சோடா

இப்போது கூடுதலாக சுவையை அதிகரிக்க நறுக்கிய ட்ரை ப்ரூட்ஸ்களை சேர்த்து கலக்கவும்.

ட்ரை ப்ரூட்ஸ்

அடுத்ததாக கேக் தட்டில் எண்ணெய் அல்லது வெண்ணெய் தடவி தயாரிக்கப்பட்ட மாவை அதில் ஊற்றவும்.

வெண்ணெய்

ஓவனை முன்கூட்டியே சூடாக்கி கேக்கை சுமார் 170-180 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 30-40 நிமிடங்கள் சுடவும்.

வெப்பநிலை

கேக்கை ஓவனிலிருந்து வெளியே எடுத்து, சிறிது நேரம் ஆறவிட்ட பிறகு, அதை டின்னிலிருந்து வெளியே எடுக்கலாம்.

ஆறவிடுதல்

அவ்வளவுதான் சுவையான வாழைப்பழ கேக் ரெடி.

ரெடி