28 SEP 2026
Credit: Getty
தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான நபர்களின் வீடுகளில் ஃபிரிட்ஜ் உள்ளது. ஒரு தெருவிலோ அல்லது ஊரிலோ ஃபிரிட் இல்லாத வீடுகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
பழங்கள், காய்கரிகள் உள்ளிட்ட உணவுப்பொருட்களை பதப்படுத்தி வைக்க பலரும் தங்களது வீடுகளில் ஃபிரிட் வைத்து பயன்படுத்துகின்றனர்.
என்னதான் ஃபிரிட் பலரும் பயன்படுத்தும் ஒரு சாதனமாக இருந்தாலும், பலருக்கும் அதனை முறையாக பயன்படுத்துவது எப்படி என்ற குழப்பம் உள்ளது.
ஃபிரிட் குளிரூட்டும் தன்மை கொண்டது என்பதால், காலநிலைக்கு ஏற்ப அதனை பயன்படுத்துவது சரியானதாக இருக்கும்.
விரைவில் மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில், ஃபிரிட்ஜை சரியாக பயன்படுத்தவில்லை என்றால் பனிக்கட்டி படிந்ததாக மாறி பயன்படுத்த முடியாமல் போய்விடும்.
மழைக்காலத்தில் ஃபிரிட்ஜின் வெள்ள நிலையை 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியசாக வைத்திருக்க வேண்டும்.
இதுவே ஃபிரிட்ஜின் ஃபிரீசரின் வெப்பநிலையை 18 டிகிரி செல்சியஸ் முதல் 19 டிகிரி செல்சியஸ் வரை வைத்திருக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஃபிரிட்ஜை இந்த வெப்பநிலையில் வைத்திருப்பது பேக்டீரியாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி, ஃபிரிட்ஜுக்குள் அதிக ஈரப்பதம் உருவாவதை தடுக்கும்.
ஒருவேளை உங்களது ஃபிரிட்ஜில் Seasonal அல்லது Smart Cooling Mode உள்ளது என்றால் அதனை ஆன் செய்து வைப்பது சிறப்பானதாக இருக்கும்.
மழைக்காலத்தில் ஃபிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதமாக அதிகம் வாய்ப்புள்ளதால் அவற்றை கூடுதல் பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டியது அவசியம்.