26 July 2025

போலி சர்க்கரை வள்ளிக்கிழங்கைச் சுலபமாகக் கண்டுபிடிக்க எளிய வழி

Credit: GETTY

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் 'Rhodamine B' என்ற ஆபத்தான ரசாயன சாயம் சேர்க்கப்படுகிறது. இது உடலுக்கு கேடு.

ரசாயனம்

விற்பனை செய்யப்படும் கிழங்குகளில் நிறத்தை அதிகரிக்கச் சாயம் பூசப்படுகிறது. இந்தக் கலப்படத்தை கண்டறிய FSSAIயின் எளிமையான பரிசோதனை உள்ளது.

கலப்படம்

பருத்தித் துணியை நீரிலோ அல்லது சமையல் எண்ணெயிலோ லேசாக நனைத்துக் கொள்ள வேண்டும். அந்தத் துணியால் கிழங்கின் மேற்பரப்பில் நன்றாகத் தேய்த்துப் பரிசோதிக்க வேண்டும்.

பருத்தித்துணி

துணியில் எந்த நிறமும் ஒட்டவில்லை என்றால் அது கலப்படமில்லாத இயற்கை கிழங்கு ஆகும். துணியில் சிவப்பு அல்லது ஊதா நிறம் ஒட்டினால் அதில் ரசாயனம் இருப்பது உறுதியாகும்.

நிறம்மாற்றம்

கிழங்கை வாங்கியவுடன் ஒரு பாத்திரத்தில் உள்ள சுத்தமான நீரில் ஊறவைக்க வேண்டும். நீரின் நிறம் சிவப்பாக மாறினால் கிழங்கில் ரசாயன சாயம் பூசப்பட்டிருப்பதை அறியலாம்.

நீர்ச்சோதனை

சர்க்கரை வள்ளிக்கிழங்கைத் தண்ணீரில் போட்டு நன்றாக வேகவைக்க வேண்டும். இயற்கையான கிழங்கு வேகும்போது அதில் உள்ள தண்ணீரின் நிறம் மாறாமல் அப்படியே இருக்கும்.

வேகவைத்தல்

வேகவைக்கும் போது பாத்திரத்தில் உள்ள தண்ணீர் நிறம் மாறினால் கலப்படம் உள்ளது எனலாம். ரசாயன சாயம் நீரில் கரைவதால் மட்டுமே அவ்வாறு தண்ணீரின் நிறம் மாறக்கூடும்.

கொதிநீர்

வேகவைத்த கிழங்கைச் சாப்பிடும் போது லேசான கசப்பு அல்லது வித்தியாசமான சுவை தெரியும். அத்துடன் தொண்டையில் எரிச்சல் உணர்வு ஏற்பட்டால் அதில் கெமிக்கல் கலப்படம் உள்ளது.

சுவை

பார்ப்பதற்கு மிகவும் பிரகாசமான பிங்க் நிறத்தில் பளபளப்பாக இருக்கும் கிழங்கைத் தவிர்க்கவும். அதிகப் பிரகாசமாக இருக்கும் கிழங்குகளில் செயற்கைச் சாயம் சேர்க்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

பிரகாசம்

கரடுமுரடான மேற்பரப்பு மற்றும் இயற்கையான மந்தமான நிறம் கொண்ட கிழங்கே நல்லது. மேற்பரப்பில் லேசான மண் அல்லது கறைகள் இருப்பது இயற்கை கிழங்கின் அடையாளமாகும்.

இயற்கை