09 OCT 2026

Credit: Getty

கடன் சிக்கலில் இருந்து வெளியே வர என்ன செய்ய வேண்டும்?

கையில் பணம் இல்லாதபோது, நிதி தேவை ஏற்படும் பட்சத்தில் பலரும் நாடுவது கடனை தான். அவ்வாறு கடனுக்கு மேல் கடன் வாங்கி பலரும் நிதி சுமையில் சிக்கிக்கொள்கின்றனர். 

கடன்

வருமானத்தை விட செலவு அதிகரிக்கும் பட்சத்தில் இந்த கடன் சுமை நாளுக்கு நாள் மிக கடுமையாக அதிகரித்துக்கொண்டே தான் செல்லும். 

நிதி சுமை

இவ்வாறு கடனுக்கு மேல் கடன் ஏறும் பட்சத்தில் பலரும் அதில் இருந்து வெளியே வர முடியாமல் தவிப்பர். 

கடன் சிக்கல்

அத்தகையவர்களுக்கு கடனில் இருந்து வெளியே வர சில வழிகள் உள்ளன. அவற்றை முறையாக பின்பற்றினாலே சுலபமாக வெளியே வர முடியும். 

வழிகள்

பலரும் ஒன்றுக்கும் மேற்பட்ட கடன்களை வைத்துக்கொண்டு கடும் சிரமங்களை எதிர்க்கொள்வர். அவர்கள் முதலில் தங்களது கடன்களை ஒருமுகப்படுத்த வேண்டும்.

ஒருமுகப்படுத்துதல்

பலரும் கடை அடைக்கும்போது உரிய தவணை தொகையை மட்டுமே செலுத்துகின்றனர். ஆனால், தவணை தொகையை விட கூடுதலாக செலுத்தும் போதுதான் கடனை விரைவாக அடைக்க முடியும்.

கூடுதல் தவணை

ஒருவரால் திடீரென அவரது வருமானத்தை அதிகரிக்க முடியாது. ஆனால், அவர் மாதம் மாதம் செய்யும் அதிகபட்ச செலவுகளை கட்டுப்படுத்துவது அவருக்கு பயன் அளிக்கும்.

செலவு குறைப்பு

பலரும் பழைய கடனை அடைக்க புதிய கடன் வாங்கி மேலும் நிதி சிக்கலில் சிக்கிக்கொள்வர். அவ்வாறு கடன் வாங்குவதற்கு முன்பு இந்த விஷயத்தை செய்ய வேண்டும்.

வழிகள்

அதாவது, பழைய கடனை அடைக்க அந்த கடனை விட குறைந்த வட்டி கொண்ட கடனை வாங்க வேண்டும். அந்த கடனை செலுத்திய பிறகு இதனை படிப்படியாக அடைக்க வேண்டும்.

குறைந்த வட்டி

எந்த கடனாக இருந்தாலும் உரிய நேரத்தில் மாத தவணை செலுத்துவது தேவையற்ற கட்டணங்கள் மற்றும் கூடுதல் நிதி செலுத்துவதை தவிர்க்க உதவியாக இருக்கும்.

கட்டணம்