07 NOV 2026
Credit: Getty
25 NOV 2026
Credit: Getty
வாகனங்கள் சீராக இயங்குவதற்கு டயர்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் வாகனங்களின் கால்களாக டயர்கள் உள்ளன.
ஆனால், பெரும்பாலானவர்கள் தங்களது வாகனத்தின் டயர்கள் குறித்து கவனத்தில் கொள்வதில்லை.
சரியான டயரை தேர்வு செய்வது, பாதுகாப்பானதாக இருப்பது மட்டுமன்றி, எரிபொருள் சிக்கனத்தை மேம்படுத்த உதவும்.
சந்தையில் பல வகையான டயர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றில் வாகனத்திற்கு சிறந்த டயரை தேர்வு செய்வது அவசியமாக உள்ளது.
பைக்கின் பாதுகாப்பு மற்றும் சிறந்த மைலேஜுக்கு டியூப்லெஸ் டயர்கள் மற்றும் ரேடியல் டயர்கள் மிகவும் ஏற்றவையாக இருக்கும்.
இந்த டயர்கள் பஞ்சராகும்போதும் காற்று உடனடியாக வெளியேறுவதை தடுத்து விபத்துக்களை தடுப்பது மட்டுமன்றி, எரிபொருள் சிக்கனத்தையும் தருகின்றன.
சரியான கிரிப் கொண்ட டயர்கள் வளைவுகளிலும் ஈரமான சாலைகளிலும் பாதுகாப்பை வழங்குகின்றன.
கரடு முரடான சாலைகளில் பயனம் செய்யும்போது அதிர்வுகளை தாங்குவதற்கு இந்த வகை டயர்கள் உதவி செய்யும்.
பயாஸ் பிளை டயர்கள் கரடு முரடான சாலைகள் மற்றும் அதிக எடை ஏற்றிச் செல்லும் தினசரி பயன்பாட்டு பைக்குகளுக்கு ஏற்றதாக இருக்கும்.
வெயில், மழை மற்றும் பனி என ஆண்டு முழுவதும் அனைத்து வகையான வானிலைகளிலும் ஆல் வெதர் டிரெட் டயர்கள் சிறந்ததாக இருக்கும்.