28 AUG 2026

H1N1 வைரஸை தவிர்ப்பது எப்படி..?

Credit: pexels

H1N1 தொற்றை தவிர்க்க உங்கள் கைகளை சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு அடிக்கடி நன்கு கழுவுங்கள்.

சோப்பு

இருமும்போதோ தும்மும்போதோ உங்கள் வாயையும், மூக்கையும் ஒரு டிஸ்யூ பேப்பர் அல்லது முழங்கையால் மூடவும்.

முழங்கை

கைகளை சுத்தமில்லாமல் கண்கள், மூக்கு மற்றும் வாயை தொடுவதை தவிர்க்கவும்.

மூக்கு

நோய்வாய்ப்பட்ட நபருடன் தொடர்பு கொண்டாலும், மாஸ்க், சானிடைசர் போன்ற போதுமான பாதுகாப்பை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

சானிடைசர்

வீட்டிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் அடிக்கடி பயன்படுத்தும் பொருட்களை சுத்தமாக வையுங்கள்.

சுத்தம்

உங்களுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால், ஓய்வு எடுத்து கொள்ளுங்கள்.

ஓய்வு

கூட்டமான இடங்களில் தேவைப்படும்போது மாஸ்க் அணியுங்கள்.

மாஸ்க்

போதுமான தூக்கம், சத்தான உணவு மற்றும் தண்ணீர் அருந்துவதன் மூலம் உங்கள் பொது ஆரோக்கியத்தை பேணுங்கள்.

உணவு

உங்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், பிறரிடம் பழகுவதை தவிருங்கள்.

பாதிப்பு

உங்களுக்கு அதிக காய்ச்சலோ, சுவாசிப்பதிலோ சிரமம் இருந்தால், உடல்நிலை மோசமடைந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுகவும்.

உடல்நிலை