08 July 2025
Credit: Freepik
நம் உடலில் பெரும்பாலும் இரத்தத்தால் நிரம்பியுள்ளது.
இருப்பினும், நம் இரத்தத்தில் எவ்வளவு இரும்புச்சத்து உள்ளது என்று தெரிந்துகொள்வது முக்கியம்.
உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் ஆக்ஸிஜனை கொண்டு செல்வதில் இரும்புச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது.
இருப்புச்சத்து குறைபாடானது பலவீனம், சோர்வு மற்றும் இரத்தசோகை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
சராசரியாக ஆரோக்கியமான ஒரு இளைஞரின் உடலில் 3 முதல் 5 கிராம் இரும்புச்சத்து உள்ளது.
உடலின் பெரும்பாலான இரும்புச்சத்து, இரத்த சிவப்பணுக்களின் ஒரு அங்கமான ஹீமோகுளோபினில் காணப்படும்.
ஹீமோகுளோபின் நுரையீரலில் இருந்து உடல் முழுவதும் ஆக்சிஜனை கொண்டு செல்கிறது.
இரும்புச்சத்து குறைபாடு மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
இரும்புச்சத்து நிறைந்த சமச்சீர் உணவு உட்கொள்வதும், தேவைப்பட்டால் மருத்துவர் அறிவுறுத்தும் பரிசோதனைகளை மேற்கொள்வதும் அவசியமாகும்.
இரும்புச்சத்து அதிகமுள்ள பீட்ரூட், மாதுளை போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.