10 September 2026
Credit: Instagram
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தை அதிகரித்தவர் ரவி மோகன். இவரின் நடிப்பில் பல படங்கள் வெளியாகியிருக்கிறது.
கடந்த 1989ம் ஆண்டில் வெளியான ஒரு தொட்டில் சபதம் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தால் ரவி மோகன் சினிமாவில் நுழைந்தார்.
பின் தெலுங்கு திரைப்படத்திலும் பாவ பாவமரிடி என்ற படத்தில் இளம் ராஜுவாக நடித்திருந்தார். இப்படம் இவருக்கு ஓரளவு வரவேற்பை கொடுத்தது.
பின் இயக்குநர் மோகன் ராஜாவின் இயக்கத்தில் வெளியான ஜெயம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக நுழைந்தார். இதனால் ரவி என்ற பெயர் ஜெயம் ரவி என்றானது.
தனது சகோதரன் மோகன் ராஜாவின் இயக்கத்தில் தொடர்ந்து படங்களில் நடிக்க ஆரம்பித்து, பல ஹிட் படங்களை கொடுத்தார். தற்போதும் ஹிட் படங்களை கொடுக்கிறார்.
மேலும் இதையடுத்து மற்ற இயக்குநர்களின் இயக்கத்திலும் படங்களில் நடிக்க தொடங்கியிருந்தார். இதுவரை இவரின் நடிப்பில் 25க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகியுள்ளது.
இறுதியாக இவரின் நடிப்பில் பராசத்தி என்ற படமானது வெளியானது, இந்த படத்தில் அவர் நெகடிவ் வேடத்தில் நடித்த நிலையில், வரவேற்கப்பட்டார்.
மேலும் தற்போது இவர் இயக்குநராக மற்றும் தயாரிப்பாளராகவும் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இவரின் தயாரிப்பில் உருவாகிவரும் புது படம் அன் ஆர்டினரி மேன்.
மேலும் தனது கைவசத்தில் கராத்தே பாபு, ஜீனி, ப்ரோ கிளப் மற்றும் பென்ஸ் போன்ற படங்கள் உள்ளது. இப்படங்களில் நடிக்க இவர் வாங்கிய சம்பளம் குறித்து தெரியுமா?
நடிகர் ரவி மோகன் சாதாரணமாக ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு ரூ 10 முதல் ரூ 15 கோடி சம்பளமாக பெறுவாராம். மேலும் படங்களில் வசூல் ஷேர் செய்வதாகவும் கூறப்படுகிறது.