18 Nov 2026
Credit: Freepik
தினமும் நடைப்பயிற்சி செய்வது உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க நடைப்பயிற்சி மிகவும் எளிய உடற்பயிற்சியாகும்.
பொதுவாக தினமும் 10,000 அடிகள் நடக்க வேண்டும். ஆனால், ஆரோக்கியமான பலன்களைப் பெற அனைவரும் 10,000 அடிகள் நடக்க வேண்டிய அவசியமில்லை.
சமீபத்திய ஆய்வுகளின்படி, தினமும் சுமார் 7,000 அடிகள் நடப்பது இதய நோய், நீரிழிவு உள்ளிட்ட பாதிப்புகளின் அபாயம் குறைவதற்கும் இது உதவக்கூடும்.
தொடர்ந்து நடப்பது இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. மேலும், இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்கவும் நடைப்பயிற்சி துணைபுரிகிறது.
தினமும் நடப்பதால் உடலில் கலோரிகள் எரிக்கப்படுகின்றன. தொடர் நடைப்பயிற்சி உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
நடைப்பயிற்சி உடலில் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவக்கூடும். தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்குவது டைப் 2 நீரிழிவு அபாயத்தை குறைக்க உதவுகிறது.
நடைப்பயிற்சி மன அழுத்தத்தை குறைத்து மனநலத்தை மேம்படுத்த உதவுகிறது. தினமும் சிறிது நேரம் நடப்பது மனதிற்கு புத்துணர்ச்சியையும் அமைதியையும் அளிக்கிறது.
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களின் உடல்நிலை மற்றும் உடல் திறனுக்கு ஏற்ப நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
ஒரே நாளில் அதிக அடிகள் நடக்க முயற்சிக்க வேண்டாம். தற்போது நடக்கும் அடிகளின் எண்ணிக்கையிலிருந்து படிப்படியாக அதிகரிப்பது நல்லது.
ஸ்மார்ட்வாட்ச் அல்லது பிட்னஸ் பேண்ட் மூலம் தினமும் நடக்கும் அடிகளைக் கணக்கிடலாம். இதன் மூலம் தினசரி நடைப்பயிற்சியின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க முடியும்.