03 Jan 2025
Credit: Freepik
பேரீச்சை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது.
இது சுவையானது மட்டுமல்ல, உடலுக்கு பல வகைகளில் நன்மை தரும்.
பலரும் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் என்று அதிகளவில் எடுத்து கொள்கிறார்கள்.
அந்தவகையில், தினமும் எத்தனை பேரீச்சை சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது முக்கியம்.
தினமும் ஒருவர் 3-4 பேரீச்சம் பழக்கங்களை சாப்பிட வேண்டும். அதிகமாக சாப்பிடும்போது வயிற்று உபாதை ஏற்படும்.
பேரீச்சையில் இயற்கையான சர்க்கரைகள் உள்ளன. இவை உடலில் மெதுவாக உறிஞ்சி ஆற்றலை வழங்கும்.
பேரீச்சை உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் அளவை இயல்பாக்கும்.
பேரீச்சை இரத்த சோகை போன்ற பிரச்சனைகளை எதிர்த்து போராட உதவும்.
இதில் இரும்புச்சத்து மற்றும் தாமிரம் நிறைந்துள்ளது.
100 கிராம் பேரீச்சையில் சுமார் 5 கிராம் இரும்புச்சத்து உள்ளது. இது நம் உடலுக்கு தேவையானதை விட அதிகம்.