07 NOV 2026
Credit: Getty
24 NOV 2026
Credit: Getty
பெரிய நிறுவனமாக இருந்தாலும் சரி, சிரிய பெட்டிக் கடையாக இருந்தாலும் சரி வரவு செலவுகளை துல்லியமாக காட்ட வேண்டும்.
அவ்வாறு வரவு, செலவுகள் துல்லியமாக இல்லை என்றால் அந்த நிறுவனம் வருமான வரித்துறையின் விசாரணை வளையத்திற்குள் சென்றுவிடும்.
ஆனால், குடும்பங்களுக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் இல்லை. இதன் காரணமாக பெரும்பாலான குடும்பங்கள் வரவு, செலவை சரிபார்ப்பது இல்லை.
ஆனால், ஒவ்வொரு குடும்பமும் தங்களுக்கான தினசரி வரவு செலவுகளை எழுதி வைக்கும் பட்சத்தில் அது பணத்தை சேமிக்க, செலவுகளை குறைக்க வழிவகை செய்யும்.
ஒரு குடும்பம் ஒரு நாளுக்கு என்ன என்ன செலவு செய்கிறது என்பதை நோட்டு போட்டு எழுதி வைக்க வேண்டும்.
பிறகு ஒவ்வொரு நாளும் என்ன என்ன செலவு செய்யப்பட்டுள்ளது, அந்த செலவுகள் அத்தியாவசியம் தானா என்பதை ஆராய வேண்டும்.
ஒரு குடும்பம் வாழ்வதற்கு தேவையான மளிகை பொருட்கள், வீட்டு வாடகை ஆகியவை தவிர்க்க முடியாதவை. ஆனால், அதனையும் தாண்டி சில கூடுதல் செலவுகள் உள்ளன.
பெரும்பாலான குடும்பங்களில் தங்களை அறியாமலே அதிக செலவுகள் ஏற்படுகிறது. அவற்றை கட்டுப்படுத்த இந்த பட்ஜெட் முறை உதவி செய்யும்.
உதாரணமாக ஒரு குடும்பம் ஒரு மாதத்திற்கு ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை செலவு செய்கிறது என்று வைத்துக்கொள்வோம்.
அந்த குடும்பம் தினசரி கணக்குகளை எழுதி சரிப்பார்க்க தொடங்கினால், அந்த குடும்பத்தால் ரூ.2,000 முதல் ரூ.3,000 வரை சேமிக்க முடியும்.