10 Apr 2025
Credit: Freepik
முகப்பரு என்பது அனைத்து வயதினரையும் பாதிக்கும் ஒரு பொதுவான தோல் பிரச்சனையாகும்.
பதின்ம வயதினர் முதல் பெரியவர்கள் வரை சமாளிக்க தெரியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
சரும பராமரிப்பு பொருட்களின் விலை அதிகம் என்பதால், பலர் இப்போது இயற்கை வைத்திய முறைகளை நாடுகின்றனர்.
வீட்டு வைத்திய முறைகள் செலவு குறைந்தவை மட்டுமல்ல, சரும வகைகளுக்கும் பாதுகாப்பானவை ஆகும்.
சில பயனுள்ள வீட்டு வைத்தியங்கள் முகப்பருவை மீண்டும் வராமல் தடுக்க உதவும்.
இந்த இயற்கை வைத்தியங்கள், எளிமையான அதே சமயம் பயனுள்ள தினசரி சரும பராமரிப்பை வழங்கும்.
தக்காளியை தடவுவதன் மூலம், சரும துளைகளை சுருக்கி, அதிகப்படியான எண்ணெயை கட்டுப்படுத்தும்.
எலுமிச்சை சாற்றை முகத்தில் பூசுவதால், முகப்பருக்கள் குறைந்து தழும்புகள் ஏற்படுவதை தடுக்கிறது.
தேன் சருமத்தில் ஏற்படும் தடிப்புஅக்ளை மென்மையாக உலர வைக்கவும், சருமம் குணமடையவும் உதவுகிறது.
மஞ்சள் கிழங்கை பசைபோல் அரைத்து தடவினால், முகப்பருக்களை திறம்பட ஆற்றும்.