Credit: Instagram

18  September 2026

மிசையமுறுக்கு 2 படம் அப்படிப்பட்டது - ஹிப்ஹாப் ஆதி!

Credit: Instagram

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக மற்றும் நாயகனாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலத்தை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி.

ஆரம்பகாலகட்டத்தில் ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்து, அதை பாடி மக்கள் மத்தியில் மிகவும் நெருக்கமானார் ஆதி.

இவரின் ஆல்பம் பாடல்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது., இதன் பிறகு சினிமாவில் இசையமைப்பாளராக  நுழைந்தார்.

இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆம்பள என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழில் இசையமைப்பாளராக நுழைந்தார்.

தொடர்ந்து சுந்தர் சி இயக்கம் படங்களுக்கு இசையமைத்து, பல ஹிட் பாடல்களை கொடுத்து , மக்களிடையே பிரபலமானார்.

.இதன் பின் ஹீரோவாக நினைத்த ஹிப்ஹாப் ஆதி, சுந்தர் சி தயாரிப்பில், 2017ம் ஆண்டில் தனது நடிப்பு, இயக்கம் மற்றும் இசையில் மீசையமுறுக்கு படத்தை உருவாக்கினார்.

இப்படம் இவருக்கு ஹீரோவாக தமிழில் அறிமுகத்தை கொடுத்தது. இதன் பின் மற்ற இயக்குநர்களின் இயக்கத்திலும் படங்களில் நடித்தார்.

இவரின் நடிப்பில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாக காத்திருக்கும் படம்தான் மீசையமுறுக்கு 2. இது சிறப்பான கதையில் உருவாகியுள்ளது.

சமீபத்தில் மீசையமுறுக்கு 2 பட ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய ஹிப்ஹாப் ஆதி, இப்படத்தை பற்றி பேசியுள்ளார்.

அதில் ஹிப்ஹாப் ஆதி, மீசையமுறுக்கு 2 படத்தின் கதை மூன்று காலகட்டங்களில் விரிகிறது, இதில் மூன்று பெண் கதாநாயகிகள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர் என தெரிவித்தார்.