27 July 2025

இரவெல்லாம் போன் யூஸ்? உங்களுக்கு காத்திருக்கும் ஆபத்துகள்!

Credit: GETTY

இரவில் தொடர்ந்து செல்போன் பயன்படுத்துவதால் தூக்கம் கெட்டு இதய ஆரோக்கியம் கடுமையாகப் பாதிக்கப்படும்.

இதயம்

இரவில் கைபேசி பயன்படுத்துவதைத் தவிர்த்து தினசரி சரியான நேரத்தில் உறங்குவது உடலுக்கு நன்மையளிக்கும்.

தீர்வு

தூக்கமின்மையின் தீவிரத்தை உணராமல் தொடர்ந்து நள்ளிரவில் போன் பார்ப்பது ஆபத்தை அதிகரிக்கும்.

அபாயம்

இரவு நேரத் தூக்கமின்மையால் உடலின் ரத்தக்குழாய்கள் சீராக இயங்கும் திறனை இழக்கக்கூடும். ரத்த ஓட்டம் பாதிப்படைவதால் திடீர் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் பெருமளவு அதிகரிக்கும்.

மாரடைப்பு

தொடர்ச்சியாகத் தூக்கத்தைக் கெடுத்துக் கொள்வது இதயம் சார்ந்த பிற சிக்கல்களுக்கும் வழிவகுக்கும்.

நோய்கள்

அதிகப்படியான யோசனை மற்றும் கவலைகள் காரணமாக இரவு நேரத்தில் தூக்கம் வராமல் போகலாம்.

சிந்தனை

தூக்கமின்மையால் ஏற்படும் மன வருத்தம் நீடிக்கத் தொடங்கினால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

மருத்துவம்

முறையான தூக்கமில்லாத போது அலைபாயும் நமது மனதைக் கட்டுப்படுத்தி வைப்பது மிகவும் கடினம்.

கட்டுப்பாடு

இரவெல்லாம் செல்போன் நோண்டுவது மூளைக்கு ஓய்வில்லாமல் செய்து மன அழுத்தத்தை உயர்த்தும்.

மனஅழுத்தம்

ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாகித் தூக்கத்தைத் தொலைப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைக் கேள்விக்குறியாக்கும்.

ஆரோக்கியம்