28 Nov 2026
Credit: Freepik
நாவல்பழம், லிச்சி, பிளம் மற்றும் சீதாப்பழம் ஆகியவை உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் பருவமழை காலப் பழங்கள் ஆகும்.
சீதாப்பழம் குளிர்காலத்திற்குள் தாமதமாக வரும் பருவமழை பழமாகும். சதைப்பற்றுள்ள இந்த பழம் ஊட்டச்சத்துக்களின் புதையல்.
சீதாப்பழத்தில் அதிகளவில் காணப்படும் நார்ச்சத்து செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது. செரிமான பிரச்சனை உள்ளவர்கள் தாராளமாக எடுத்து கொள்ளலாம்.
அமெரிக்க வேளாண்மை துறையின் கூற்றுப்படி, 100 கிராம் சீதாப்பழத்தில் 44 கிராம் அளவிலான நார்ச்சத்து உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
100 கிராம் சீதாப்பழத்தில் 36.3 கிராம் வைட்டமின் சி உள்ளது. இது இது ஒரு நாளில் உங்களுக்கு தேவையான வைட்டமினின் குறிப்பிடத்தக்க அளவாகும்.
சீதாப்பழத்தில் ரிபோப்ளேவின், நியாசின், போலேட், தயாமின் மற்றும் வைட்டமின் ஏ உள்ளிட்ட முக்கியமான ஊட்டச்சத்துகள் உள்ளன.
மேலும், சீதாப்பழத்தில் கால்சியம், பொட்டாசியம், பாஸ்பர, மெக்னீசியம் போன்ற கனிமங்கள் நல்ல அளவில் உள்ளன. சிறிதளவு இரும்பு, துத்தநாகம் மற்றும் தாமிரமும் உள்ளன.
சீதாப்பழத்தில் கோரினோயிக் அமிலம், ஃபிளாவனாய்டுகள் மற்றும் கரோட்டினாய்டுகள் போன்ற சில சக்திவாய்ந்த தாவர அடிப்படையிலான சேர்மங்களும் உள்ளன.
சீதாப்பழம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது, அழற்ஜியை குறைப்பது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது என பல நன்மைகளை தரும்.
சீதாப்பழம் உடலுக்கு இயற்கையான ஆற்றலை வழங்குவதோடு, அதிக கலோரிகள் நிறைந்திருப்பதால், உடல் எடை அதிகரிக்கவும் உதவும்.