10 Jun 2025

ஒல்லி டூ குண்டு: ஆரோக்கியமாக உடல் எடையை உயர்த்தும் மேஜிக் ஜூஸ்!

Credit: GETTY

உடல் எடையைக் குறைக்கப் போராடுபவர்கள் ஆரோக்கியமான முறையில் குறைக்க முயற்சி செய்கிறார்கள்.

அறிமுகம்

வாழைப்பழம் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாகவும் அதே நேரத்தில் உடலுக்கு அதிக ஆரோக்கியமாகவும் இருக்கும்.

வாழைப்பழம்

உடல் எடை குறைவாக இருப்பவர்கள், தினமும் 2 முறை வாழைப்பழம் ஜூஸ் போட்டு தொடர்ந்து குடித்து வந்தால் அவர்களின் உடல் எடை விரைவாக அதிகரிக்கும்.

பயன்பாடு

வாழை ஜூஸ் தயாரிக்கும் போது அதில் வெள்ளைச் சர்க்கரைக்கு பதிலாக தேன் சேர்த்துக் கொண்டால், அது உடலுக்கு கூடுதல் நன்மைகளையும் சிறந்த சுவையையும் கொடுக்கும்.

இனிப்பு

இந்த வாழைப்பழ ஜூஸில் உடலுக்கு நன்மை தரும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களும் நிறைந்துள்ளன.

ஊட்டச்சத்து

வாழைப்பழத்தில் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய முக்கிய வைட்டமின்களான வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே ஆகியவை அதிகளவில் உள்ளன.

வைட்டமின்கள்

உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காண, இந்த ஆரோக்கியமான பனானா ஜூஸை தொடர்ந்து 3 மாதங்கள் தினமும் குடித்து வந்தால் மிகச் சிறந்த பலனைப் பெறலாம்.

காலஅளவு

வாழைப்பழத்திற்கு அடுத்தபடியாக உடல் எடையை இயற்கையான முறையில் ஆரோக்கியமாக அதிகரிக்கச் செய்வதற்கு சிறந்த ஒரு பழமாக இருந்து வருவது பேரிச்சம்பழம் ஆகும்.

பேரிச்சம்பழம்

பேரிச்சம்பழத்தில் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம், புரதம் மற்றும் வைட்டமின்கள் ஏ, சி, ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளடங்கியுள்ளன.

கார்போ

உடல் எடையை அதிகரிக்க விரும்புவோர் மேற்கூறிய வாழைப்பழம் அல்லது பேரிச்சம்பழம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை முறையாகத் தேர்வு செய்து குடித்து வந்தாலே உடல் எடை எளிதாக கூடும்.

முடிவு