08 May 2025

சர்க்கரை நோயைத் தடுக்கும் ஆரோக்கிய ரகசியங்கள்!

Credit: Getty

உடல் எடையை சீராக பராமரிப்பதில் எப்போதும் அதிக கவனம் செலுத்த வேண்டும். உடல் எடை அதிகரித்தால் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு 60 சதவீதம் உயருகிறது.

எடை

ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வோர், காலை மற்றும் மாலை வேளைகளில் உடற்பயிற்சி செய்வது உடலுக்கு மிகுந்த நன்மையை அளிக்கும்.

பயிற்சி

ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கு ஒருமுறை மூன்று நிமிடங்கள் நடப்பது சர்க்கரையின் அளவை வெகுவாகக் குறைக்க உதவுகிறது.

நடை

தொலைபேசியில் பேசும்போது ஒரே இடத்தில் அமர்ந்து பேசாமல் நடந்து கொண்டே பேசலாம். இந்த எளிய பழக்கம் உடலில் தேவையற்ற சர்க்கரை சேர்வதைத் தடுக்க பெரிதும் உதவும்.

உரையாடல்

பல மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதைத் தவிர்த்து எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். அவ்வப்போது எழுந்து நடப்பது சர்க்கரை நோய் வராமல் தடுக்க சிறந்த வழியாகும்.

இயக்கம்

மனதிற்குப் பிடித்த பாடல்களுக்கு சிறிய நடன அசைவுகளை மேற்கொள்வது மன அழுத்தத்தைக் குறைக்கும். இத்தகைய சின்னச் சின்னச் செயல்கள் உடலில் பெரிய ஆரோக்கிய மாற்றங்களைக் கொண்டு வரும்.

நடனம்

வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த சரிவிகித உணவு முறையைப் பின்பற்றுவது சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும்.

சத்துக்கள்

கார்போஹைட்ரேட் மற்றும் சத்துக்கள் நிறைந்த கலவையான உணவுகளை முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும். 

கார்போ

நார்ச்சத்து மிகுந்த உணவுகள் செரிமான மண்டலத்தை மேம்படுத்தி உடல் நலனைப் பாதுகாக்கிறது. 

நார்ச்சத்து

சர்க்கரை நோய் வருவதற்கு முக்கிய காரணமான மன அழுத்தத்தைக் குறைத்து நிம்மதியாக இருக்க வேண்டும். 

மனஅழுத்தம்