Credit: Instagram
10 November 2026
Credit: Getty
ஆரோக்கியம்: கை, கால்களில் இருக்கும் நகங்கள் நமது உடல் ஆரோக்கியத்தின் முக்கிய கண்ணாடியாக கருதப்படுகிறது.
உறுப்புகள்: உடலின் உள் உறுப்புகளின் சீரான செயல்பாடு மற்றும் ஆயுட்காலத்தை நகங்களின் வளர்ச்சி உணர்த்துகிறது.
வளர்ச்சி: நகங்கள் எவ்வளவு வேகமாக வளருகிறதோ அந்தளவிற்கு உடல் ஆரோக்கியமாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இதயம்: அடிக்கடி நகம் வெட்டும் பழக்கம் இதயம், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியமான இயக்கத்தைக் குறிக்கும்.
ஊட்டச்சத்துக்கள் : நகங்கள் வேகமாக வளர தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் ரத்தத்தின் மூலமாகவே கிடைக்கின்றன.
சுழற்சி: வயது அதிகரிக்கும் போது ரத்த ஓட்டத்தின் வேகம் குறைவது இயல்பு, ஆனால் நக வளர்ச்சி சுறுசுறுப்பைக் காட்டும்.
இளமை : இளம் வயதினருக்கு அதிகளவு ரத்த ஓட்டம் மற்றும் ஹார்மோன் மாற்றங்களால் நகங்கள் மிக வேகமாக வளரும்.
கர்ப்பம்: கர்ப்பிணிப் பெண்களுக்கு உடலில் ஏற்படும் பல்வேறு ஹார்மோன் மாற்றங்களால் நகங்களின் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.
தோற்றம்: நகங்களின் வேகத்தை தாண்டி, அது அதன் அமைப்பு மற்றும் அதன் தோற்றமும் உடல் நலனை வெளிப்படுத்தும்.
குறைபாடு: நகங்களில் கோடுகள், விரிசல்கள் அல்லது பள்ளங்கள் ஏற்பட்டால் அது உடலில் உள்ள குறைபாடுகளைச் சுட்டும்.
உணவு: இரும்புச்சத்து, கால்சியம் போன்ற ஊட்டச்சத்து குறைபாடுகள் நகங்களின் வளர்ச்சி மற்றும் தோற்றத்தை நேரடியாகப் பாதிக்கும்.